Sunday, October 13, 2013

நெல்லிக்காய் இனிப்பு பச்சடி

முதல் பதிவை எந்த இனிப்புடன் தொடங்கலாம் என்று எண்ணும் போதே, அம்மாவின்  "நெல்லிக்காய் இனிப்பு பச்சடி" நினைவுக்கு வந்தது. மிகவும் எளிமையாய் செய்ய கூடியது, ஆரோக்கியமானதும் கூட! நெல்லிக்காயின் மருத்துவ குணம் அனைவரும் அறிந்ததே அத்துடன் வெல்லம் சேர்ப்பதால், உடலுக்கு நல்லது.

நெல்லிக்காயின் சில மருத்துவ பயன்களை :

1. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. 

2. நினைவாற்றலை பெருக்க உதவும்.

3.இளமையுடன் தோற்றமளிக்க உதவும்.

4. நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது.

5. சரும பிரச்சனைகளை குணப்படுத்தும்.   

தேவையான பொருட்கள் :

1. நெல்லிக்காய் - 2 கப் 

2. வெல்லம் - 1 கப் (பொடிந்தது)

3. உப்பு - சிறிது 

4. தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (தேவையெனில்)



செய்முறை :

1. நெல்லிக்காயை கழுவி, சுத்தப்படுத்தி அடிகனமான வாணலியில் தண்ணீர் சேர்த்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

2. பொடிந்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து, நன்கு கிளறி ஜாம் பதம் வந்தவுடன், தேங்காய் சேர்த்து இறக்கவும்.

குறிப்பு :

1. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம். சுவையும், மனமும் கூடும்.

2. மிகவும் சிறிய குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினால், கொட்டையை நீக்கி விட்டு, சதை பகுதியை மட்டும் கொடுக்கவும்.

4 comments:

  1. முதல் பதிவே இனிப்பான, உடலுக்கு பயன் தரும் குறிப்போடு பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து அசத்துங்கள்.;) !

    ReplyDelete
  3. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தனபாலன் சார் & ஆசியா அக்கா.

    ReplyDelete
  4. உங்கள் தமிழ் பிளாக் இன்று தான் என் கண்ணில் பட்டது. ஏன் தொடரவில்லை
    நெல்லிக்காய் இனிப்பு பச்சடி ரொம்ப நல்ல இருக்கு

    ReplyDelete

நண்பர்களே! தங்கள் கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. பின்னூட்டம் இடும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.