Sunday, November 24, 2013

அங்காயப் பொடி

அங்காயப் பொடியை நாம் தினமும் உணவில் சேர்த்து கொண்டால், அஜீரண கோளாறுகள் நீங்கும். பாலூட்டும் பெண்களுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள் :

1. சுண்டைக்காய் வற்றல் - ஒரு கைப்பிடி
2. மணத்தக்காளி வற்றல் - ஒரு கைப்பிடி
3. வேப்பம்பூ - ஒரு கைப்பிடி
4. சுக்குப் பொடி - 1/2 டீஸ்பூன் 
5. பெருங்காயப் பொடி - 1/2 டீஸ்பூன் 
6. ஓமம் - 1 டீஸ்பூன் 
7. தனியா - 1 டேபிள்ஸ்பூன் 
8. சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன் 
9. மிளகு - 1 டீஸ்பூன் 
10. காய்ந்த மிளகாய் - 4
11. உப்பு - தேவைகேற்ப 
12. நல்லெண்ணெய் - சிறிதளவு




செய்முறை :

1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்தவுடன் உப்பு தவிர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக வறுத்து கொள்ளவும்.

2. ஆறியவுடன், உப்பு சேர்த்து பொடியவும். 

3. சூடான சாதத்துடன், சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடவும்.

Saturday, November 2, 2013

பேசன் லாடு / கடலைமாவு உருண்டை

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த வட இந்திய இனிப்பை நாம் மிகவும் எளிதாய் செய்யலாம். தீபாவளி என்பதால் சற்றே ஆரோக்கியத்தை பின்னே தள்ளிவிட்டு, லாடுவின் செய்முறையை கொடுத்துள்ளேன். அடுத்த பதிவு கண்டிப்பாக மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும். பேசன் லாடுவின் செய்முறையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

1. கடலைமாவு - 4 கப்
2. சர்க்கரை - 2 கப்
3. நெய் - 1 கப்
3. ஏலக்காய்த்தூள் -  சிறிது 
4. முந்திரி & உலர்ந்த திராட்சை - 1/2 கப் 




செய்முறை :

1.  ஒரு வாணலியில் கடலை மாவை மிதமான தீயில் நன்கு வாசனை வரும் வரை கட்டியில்லாமல் வறுக்கவும்.

2. உருக்கிய நெய்யை ஊற்றி, கட்டியில்லாமல் கிளறி அடுப்பை அணைக்கவும்.

3. முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். 

4. ஏலக்காய்த்தூள், முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் சர்க்கரையை கடலைமாவுடன் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

5. மாவு கலவை கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

6. காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

பின்குறிப்பு :

லாடு செய்வதற்கு என்று கடைகளில், கடலைமாவு கொரகொரவென்று கிடைக்கும். எப்பொழுதும் வாங்கும் கடலைமாவில் செய்ய விரும்பினால், சிறிது ரவை(சூஜி) சேர்த்து செய்யவும்.